உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன்

ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன்


'ஏஐ'யின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்களது புகைப்படங்கள், வீடியோக்கள் என எதையெதையோ சிலர் தவறாகப் பரப்பி வருகிறார்கள். இதனால், பல சினிமா பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட ஆளுமை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் அதற்கான தடையைப் பெற்று வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இளையராஜா ஆகியோரது வரிசையில் தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில முதல்வருமான பவன் கல்யாண் கடந்த மாதம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுமை உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் வணிக ரீதியில் அவரது பெயர், இனிஷியல், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை ஜனவரி 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !