ஹிந்தியில் ஓப்பனிங்கிலேயே சரிவடைந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' வசூல்!
தென்னிந்திய நடிகர்களில் பிரபாஸின் படங்களுக்கு ஹிந்தியில் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்து வருகிறது. குறிப்பாக 'பாகுபலி'க்கு பிறகு அவர் நடித்த 'ராதே ஷ்யாம்' தோல்வி அடைந்தபோதும்கூட ஹிந்தியில் நல்ல வசூலை கொடுத்தது. அதேபோல் 'சலார், கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களும் ஹிந்தியில் பெரிய அளவில் வசூலித்தன.
இந்த நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி திரைக்கு வந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் ஹிந்தியில் பெரிய ஓப்பனிங்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் முதல் நாளில் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது. தற்போது ஹிந்தியில் பிரபாஸ் படத்துக்கு போட்டியாக எந்த ஹிந்தி படங்களும் வெளியாகாத நிலையிலும் இந்த படம் ஹிந்தி ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மோசமான தொடக்கம் காரணமாக, ராதே ஷ்யாம் படத்தை விடவும் இப்படம் ஹிந்தியில் குறைவாகவே வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.