உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா

பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா


தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாக 'பராசக்தி, ஜனநாயகன்' சண்டை, விஜய், சிவகார்த்திகேயன் சண்டை என இருப்பதைப் போல, தெலுங்கிலும் ரசிகர்கள் சண்டை நிறையவே உள்ளது.

அங்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்குள் கடுமையான மோதல் நிலையே உள்ளது. சமூக வலைதளங்களில் அவர்களுக்குள் நடக்கும் வார்த்தை மோதல்கள் தமிழ் ரசிகர்களை விடவும் குறைந்தது அல்ல.

இந்நிலையில் தங்களது படத்திற்கு சக போட்டியாளர்களின் ரசிகர்களால் ஏதும் இழுக்கு ஏற்படலாம் என நினைத்த சிரஞ்சீவியின் 'மன சங்கர வரபிரசாத் காரு' படக்குழுவினர் ஆன்லைன் டிக்கெட் இணையதளத்தில் 'ரேட்டிங்' போடுவதற்கு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதனால், அந்தப் படத்திற்கு டிக்கெட் புக் செய்பவர்கள் ரேட்டிங் போட முடியாது.

இந்நிலையில் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா, நடிகர் சிரஞ்சீவிக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக அவர் நடித்து வெளிவந்த 'லிகெர்' படம் வந்த போது சமூக வலைதளங்களில் குறி வைத்து தாக்கப்பட்டார்.

அவருடைய பதிவில்,

“இதைப் பார்த்து சந்தோஷமும் சோகமும் - பலரின் கடின உழைப்பு, கனவுகள் மற்றும் பணம் ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதை அறிந்து சந்தோஷம்.

நம்முடைய சொந்த மக்களே இந்தப் பிரச்னைகளை ஏற்படுத்தும் உண்மை காரணமாக மேலும் சோகம், வாழவும் வாழ விடவும் என்பது என்ன ஆனது ? மற்றும் ஒன்றாக வளர்வது?.

'டியர் காம்ரேட்' நாட்களிலிருந்து நான் முதலில் அதிர்ச்சியூட்டும் அமைப்புசார் தாக்குதல்களின் அரசியலைப் பார்க்கத் தொடங்கினேன். இந்த ஆண்டுகளில் என் குரல் கேட்காதவர்களின் காதுகளில் விழுந்தது - என்னிடம் சொல்லப்பட்டது, யாராலும் ஒரு நல்ல படத்தை நிறுத்த முடியாது என்று. மற்றும் என்னுடன் படம் எடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் இயக்குநரும், விரைவில் இந்தப் பிரச்னையின் அளவை உணர்கிறார்கள்.

நான் பல இரவுகளை தூங்காமல் இருந்து, இதைச் செய்யும் எந்த வகையான மக்கள், மற்றும் அவர்களை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறேன், என் கனவுகளையும் என்னைப் போல வரும் மற்றும் எனக்குப் பிறகு வரும் பலரின் கனவுகளையும் பாதுகாக்க.

இப்போது இது வெளியில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி, மற்றும் நீதிமன்றம் இப்போது மெகா ஸ்டார் போன்ற பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஒருவரை நடித்த படங்களுக்குக்கூட அச்சுறுத்தலை அங்கீகரிக்கிறது.

இது பிரச்னையை முழுமையாக தீர்க்காது ஆனால் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் குறைவாக இருக்கும்.

இப்போதைக்கு #MSG மற்றும் அனைத்து சங்கராந்தி படங்களும் விடுமுறை காலத்தில் நம்மை அனைவரையும் மகிழ்வித்து மிகச் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வராமல், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் வந்ததால் அவர் மீது விஜய்யின் ரசிகர்கள் கடுமையான வார்த்தைத் தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் செய்து வருகிறார்கள். நேற்று 'பராசக்தி படுதோல்வி' என்றெல்லாம் டிரென்டிங் செய்து வந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !