உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோ ஆனார் பப்பு

ஹீரோ ஆனார் பப்பு


சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பப்பு. 'பன் பட்டர் ஜாம், தி பெட்' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில நடித்தார். தற்போது 'மைடியர் டாலி' என்ற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். ஏ.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். சிம்மமூர்த்தி சினிமாஸ் சார்பில் ஆர்.எம்.ஜெயராமசந்திரன் தயாரிக்கிறார். பாசில் இசை அமைத்துள்ளார், பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் அரவிந்த்ராஜ் கூறும்போது, “திருமணத்தை வெறுக்கும் அனுபமாவை, பப்பு ஒரு தலையாக காதலிக்கிறார். ஒரு நிபந்தனையின் பேரில் திருமணமும் செய்துகொள்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் திடீர் திருப்பம் அரங்கேறுகிறது. அது என்ன? தம்பதியினர் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா? என்பதே கதை. காதல், காமெடி கலந்து சுவாரசிய படைப்பாக இந்த படத்தை கொடுத்துள்ளோம். சென்னையில் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் திரைக்கு வரவிருக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !