உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வித்யூத் ஜம்வால் நிர்வாண போஸ்

வித்யூத் ஜம்வால் நிர்வாண போஸ்


முன்பெல்லாம் நடிகைகள் நிர்வாண போஸ் கொடுத்தால்தான் அது ஆச்சர்யமான செய்தி. இப்போது நடிகர்கள் நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சியூட்டுகிறார்கள். சில காலம் வரை சினிமாவில் நிர்வாணமாக நடித்தார்கள், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள்கூட நிர்வாணமாக நடித்தார்கள்.

இப்போது சினிமாவை தாண்டி நிர்வாண போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு பரபரப்பு கிளப்புகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் நிர்வாண போஸ் கொடுத்து படங்களை வெளியிட்டார். அதேபோன்று பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது உடலில் பொட்டு துணி இல்லாமல் மரத்தில் ஏறும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

'துப்பாக்கி' படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் பாலிவுட்டில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்தார். தமிழில் 'அஞ்சான், பில்லா 2' படங்களிலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மதராஸி' படத்திலும் வில்லனாக நடித்தார். தற்போது 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !