உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி

காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி

திரவுபதி 2 படம் குறித்து சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் மோகன் ஜி பேசுகையில், ‛‛இதில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட இன்னும் சம்பளம் வாங்கவில்லை. இந்த கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஹீரோவை மாற்ற மாட்டேன் என்றேன். திரவுபதி முதல் பாகம் பண்ணும்போது அதில் நடித்த கதாநாயகிக்கு குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு என்னையே எதிர்த்து பேசக்கூடிய நிலைமை வந்தது. மோகன் ஜி படத்தில் ஏன் நடிக்கிறாய் என்று ஒரு சிலர் மிரட்டுவார்கள், இதனால் 2 பேர் பாதிக்க பட்டு உள்ளனர். யார் என்று சொல்ல விரும்பவில்லை. அதனால் இந்த பட ஹீரோயின் ரக் ஷனாவுக்கு கதை முழுவதும் சொல்லி நடிக்க வைத்தேன்

காசி சென்றபோது அங்கே கோயிலுக்குள் நந்தி இருந்தது. ஆனால் எதிரே சிவன் சிலை இல்லை. ஞானவாபி மசூதி இருந்தது. படையெடுப்பு பற்றி கேள்விப்பட்டேன். வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் அந்நிய தேசத்தில் இருந்து வந்தவர்களால் கடும் பாதிப்பு என அறிந்தேன். அப்போது இந்த பட கரு கிடைத்தது. தோலை உரித்து தொங்க விடுவேன் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். திருவண்ணாமலை பின்னணியில் ஆண்ட வீர வல்லால மகாராஜா என்பவர் அப்படி தண்டனைக்கு உள்ளானர், அதனை இந்த படத்தில் பார்ப்பீர்கள்.

இந்த நாட்டில் ஒரு கடவுளை மட்டுமே வழிபட முடியாது. எல்லா தெய்வங்களையும் மதிக்க வேண்டும். இந்த படத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்ல என்ற வசனம் இடம் பெற்று உள்ளது. நிச்சயமாக பிரச்சனை வராது என்று நினைக்கிறேன். ஹிந்தியில் சாவா படம் நல்ல வசூல் செய்தது அது தான் எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்தது.

வரலாறு குறித்த ஆதாரம் இருந்தால் நிச்சயமாக எந்த படமும் பண்ணுவேன். எம்கோனே பாடலை ஒருவரை பாட வைத்து ஒரு தவறு செய்தேன். அதற்கு பதிலாக தான் பத்மலதாவை பாட வைத்தேன். இந்தப்படம் இந்திய, முஸ்லிம்களை எந்த வகையிலும் காயப்படுத்தாது. இந்த படத்தில் வரும் துருக்கி நாட்டவர்களை பார்க்கும் பொழுது துருக்கியிலிருந்து வந்த மனிதர்களாய் மட்டுமே பார்க்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !