ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு
ADDED : 16 hours ago
சமீபத்தில் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக பிரபாஸ் நடிப்பில் ராஜா சாப் திரைப்படம் வெளியானது. ஹாரர் கலந்த காமெடி படமாக மாருதி டைரக்ஷனில் வெளியான இந்த இந்த படம் வெளியீட்டுக்கு முன்னதாகவே படத்தின் நீளம் கருதி கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு குறைவில்லாத காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் டிரைலரில் இடம் பெற்ற பிரபாஸின் வயதான தோற்றம் கொண்ட காட்சி எதுவும் படத்தில் இடம்பெறவில்லையே என்று தங்களது வருத்தத்தை பதிவிட்டனர்.
இதை கவனித்த படக்குழுவினர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பிரபாஸின் வயதான தோற்றம் கொண்ட காட்சியையும் மேலும் கூரை மேல் நின்று பிரபாஸ் சண்டை போடும் காட்சி ஒன்றையும் இணைத்து உள்ளதாகவும் அடுத்தடுத்து வரும் நாட்களில் ரசிகர்கள் இதை திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.