உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண்

டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் தற்போதைய ஆந்திர அரசின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களில் ரசிகர்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது சண்டைக்காட்சிகளை தான். அவரும் தனது படங்களில் அதை குறைவில்லாமல் ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். அந்த வகையில் சினிமாவில் நுழைவதற்கு முன்பாகவே அதாவது அவர் சென்னையில் இருந்த காலகட்டத்திலேயே கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டுதான் சினிமாவில் நுழைந்தார். அந்த சமயத்தில் தான் அவர் பிரசித்தி பெற்ற ஜப்பானிய வாள் சண்டை பயிற்சியையும் கற்றுக் கொண்டார்.

இந்த கலையில் அவரது நீண்ட கால அர்ப்பணிப்பும் அதில் அவர் காட்டி வரும் ஒழுங்கும் காரணமாக சோகோ பூ கன்ட்ரி கை என்கிற ஜப்பானிய அமைப்பு அவருக்கு இந்த கலையின் ஐந்தாவது டான் என்கிற அங்கீகாரத்தை அளித்துள்ளது. தெலுங்கு திரை உலகில் இருந்து முதன்முதலாக இப்படி ஒரு கவுரவத்தை பெறுவது பவன் கல்யாண் மட்டுமே. அது மட்டுமல்ல, கோல்டன் டிராகன் ஆர்கனைசேஷன் பவன் கல்யாணுக்கு டைகர் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்கிற பட்டத்தையும் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !