உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா நாயகன் ஆனார் டிவி நடிகர் பிரணவ் மோகனன்

சினிமா நாயகன் ஆனார் டிவி நடிகர் பிரணவ் மோகனன்


ஜே .ஆர் சினி வேர்ஸ் சார்பில் டாக்டர் ராஜேந்திரன், ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படம் 'எம்ஜி 24'. அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.

'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், 'ஸ்ட்ரைக்கர்' படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். 'மயிலாஞ்சி' படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் 'விசாரணை' படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ், காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலாஜி, நவீன்குமார் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகரிடம் உதவியாளராக பணியாற்றிய சதாசிவ ஜெயராமன் இசையமைக்கிறார். பிப்ரவரி மாதம் 20ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் பயர் கார்த்திக் கூறியதாவது: சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்கியுள்ளோம். உதவி இயக்குனராக இருக்கும் கதையின் நாயகனும், அவன் நண்பர்களும் சென்னையில் இருந்து பாலக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாங்குவதற்காக, அதன் மதிப்பை சரி பார்க்க நேரில் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்க அதிலிருந்து எப்படி தப்பித்தார்களா, அவர்களுக்கும், அந்த வீட்டில் இருந்தவர்களும் என்ன நடந்தது? என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.

பாலக்காட்டில் உள்ள ஒரு வீடு, மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது. அந்த வீட்டின் நம்பர் 24. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில் நடப்பதால் ஜமீனுடைய பெயரையும் வீட்டின் எண்ணையும் இணைத்து இந்த படத்திற்கு எம்ஜி 24 என்று பெயர் வைத்துள்ளோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !