உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷாவுக்கு என்னாச்சு? எதுவும் பேசுவது இல்லையே...

திரிஷாவுக்கு என்னாச்சு? எதுவும் பேசுவது இல்லையே...

சினிமாவில் 23 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா, கடந்த 6 மாதங்களாக ஏனோ அமைதியாக உள்ளார். சினிமா நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வருவது இல்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இல்லை. அதிகம் பேசுவது இல்லை, ஏதோ ஒன்றிரண்டு படங்கள், வீடியோக்களை மட்டும் சோஷியல் மீடியாவில் பதிவு செய்வதுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட பட செய்திகளும் அதிகம் வருவது இல்லை.

திரிஷாவுக்கு என்னாச்சு என்று விசாரித்தால், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷாவுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அதில் நடித்த மற்ற ஹீரோயின்களை விட சகோதரியாக நடித்த குந்தவையைதான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஜோடியாக தக் லைப் படத்தில் நடித்தார். அந்த படம் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, திரிஷா கேரக்டரை, திரிஷாவை அதிகமாக விமர்சனம் செய்தனர் ரசிகர்கள். அதனால் அவர் ரொம்பவே அப்செட்.

தவிர, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரை ட்ரோல் செய்கிறார்கள். அதனால், சில மாதங்களாக அவர் ஒதுங்கி இருக்கிறார். அவர் எந்த போட்டோ வெளியீட்டாலும், என்ன பேசினாலும் அவருக்கு நெகட்டிவ் கமென்ட் அதிகமாக வருகிறது. எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பின்னே ஏன் வம்பு இழுக்கிறார்கள் என பீல் பண்ணுகிறார்கள்.

இப்போது தமிழில் சூர்யா ஜோடியாக கருப்பு, தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வம்பரா, மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படங்களில் நடித்து வருகிறார். சில வெப் சீரியல்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தான் பேச வேண்டாம், தனது படங்கள், நடிப்பு பேசட்டும் என்று அமைதி காக்கிறார்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !