அந்த வாத்தியார் போலவே இந்த வாத்தியாரும்... : கிர்த்தி ஷெட்டி
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‛வா வாத்தியார்' படம் பல பிரச்னைகளை கடந்து இன்று வெளியாகி உள்ளது. சென்னையில் நடந்த இப்பட விழாவில் கிர்த்தி ஷெட்டி பேசியதாவது : ‛‛வா வாத்தியார் படம் ஒரு பெஸ்டிவல் படம் என்று இயக்குனர் நலன் சொன்னார். அது உண்மையாகிவிட்டது. பொங்கலுக்கு படம் வருகிறது. மக்கள் குடும்பத்தினருடன் வந்து படம் பார்ப்பார்கள். ஒரு சிலர் பட ரிலீஸ் லேட்டாகிவிட்டதே, நீங்க அப்செட் ஆகி விட்டீர்களா என்று கேட்டார்கள்.
நல்லது நடந்தால் அது கடவுள் பிளான் என்றுதான் நாம் சொல்வோம். அதுபோல் வேறு சில விஷயங்கள் நடந்தாலும் அதுவும் கடவுள் செய்வதுதான். ஆனால் முன்பை விட அவர் பெரிதாக, நல்லதாக நமக்கு செய்வார் என நான் நம்புகிறேன். வா வாத்தியார் படத்திலும் அதுவே நடந்து இருப்பதாக நினைக்கிறேன். இயக்குனர் நலனுக்கு இது கனவுப்படம், கண்டிப்பாக வெற்றி பெறும்.
நான் கார்த்தியின் பெரிய ரசிகை என்று எல்லாருக்கும் தெரியும். இந்த படத்துக்குபின் இன்னும் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். அவரின் தனிப்பட்ட குணம், நல்லது செய்யும் விஷயம் படத்துக்கு இந்த படத்தில் அவர் நடித்த வாத்தியார் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறது. அந்த வாத்தியார் போலவே, இந்த வாத்தியாரும் பல குணங்களில் ஒத்து போய் இருக்கிறார். என்னுடைய முதல் நேரடி தமிழ் படம் இது'' என்றார்.