சச்சினுடன் விரலால் கிரிக்கெட் விளையாடிய அமிதாப் பச்சன்
ADDED : 17 minutes ago
இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் (ISPL) சீசன் 3 சூரத்தில் சமீபத்தில் துவங்கியது. மொத்தம் 40 போட்டிகள் கொண்ட இந்த சீசன் 3, வரும் பிப்ரவரி 6ம் தேதி நிறைவடைகிறது. இதற்கான துவக்க விழா சூரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சனும் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கரும் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் தங்களது விரல்களாலேயே ஒரு வேடிக்கையான கிரிக்கெட் விளையாட்டை சில நொடிகள் விளையாடினார்கள். இது குறித்த வீடியோ ஒன்றையும் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “கிரிக்கெட் கடவுளுடன் விரலால் கிரிக்கெட் விளையாடிய தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.