உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறைந்த பின்னரும் பொங்கலுக்கு மோதிய எம்ஜிஆர், கருணாநிதி

மறைந்த பின்னரும் பொங்கலுக்கு மோதிய எம்ஜிஆர், கருணாநிதி

ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் பிற்காலத்தில் அரசியலில் எதிரிகளாக மாறினார். சினிமாவில் இருந்த காலத்தில் இவர்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். 1987ல் எம்ஜிஆர் காலமாகிவிட்டார், 2018ல் கருணாநிதி மறைந்துவிட்டார். இந்நிலையில் இந்த பொங்கலுக்கு இவர்கள் இவரும் மறைமுகமாக சினிமாவில் மோதியிருக்கிறார்கள்.

ஆம், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் இரண்டு சீன்களின் கருணாநிதி கேரக்டர் வருகிறது. கார்த்தி நடித்த வா வாத்தியார் படத்தில் பல சீன்களில் எம்ஜிஆர் கேரக்டர் வருகிறது. இந்த போட்டியை யாரும் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்குபின் இந்த அதிசயம் சினிமாவில் நடந்து இருக்கிறது.

மறைந்தபின் இவர்கள் சினிமாவில் மோதியிருக்கிறார்கள். வா வாத்தியார் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக பிளான் இல்லை. ஜனநாயகன் தள்ளிப்போனதால் திடீரென வந்தது. அதனால், இந்த பொங்கலுக்கு எம்ஜிஆர், கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பை அவர்களுடைய ரசிகர்கள், தொண்டர்கள் பெற்று இருக்கிறார்கள். இனி இப்படிப்பட்ட விஷயங்கள் கோலிவுட்டில் நடக்குமா என தெரியவில்லை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !