உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 வருடம் கழித்து டெலிபோன் எண்ணில் புதிய காருக்கு நம்பர் வாங்கிய மோகன்லால்

30 வருடம் கழித்து டெலிபோன் எண்ணில் புதிய காருக்கு நம்பர் வாங்கிய மோகன்லால்


மலையாள நட்சத்திரங்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ் போன்ற கார் பிரியர்கள் கோடிகளில் மதிப்புள்ள விலையுயர்ந்த கார்களை வாங்கி வரும் நிலையில் மோகன்லால் வெறும் 33 லட்சம் கொண்ட புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காருக்கு தனக்கு தேவையான பேன்சி நம்பரை வாங்க எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார் மோகன்லால்.

ஆனால் அதற்கு இன்னும் இரண்டு பேர் போட்டிக்கு நின்றார்கள். அதனால் இந்த மூவருக்கும் சேர்த்து அந்த நம்பருக்கான ஏலம் விடப்பட்டது. அதில் மோகன்லால் தரப்பிலிருந்து ஏலம் எடுக்க வந்தவர் 1.80 லட்சம் ரூபாய்க்கு அந்த நம்பரை ஏலம் எடுத்ததுடன் வந்திருந்த மற்ற இருவரிடமும் இதற்கு மேல் ஏலம் கேட்காமல் விட்டுத் தருமாறும் கேட்டுக் கொண்டார். அதனால் மோகன்லாலுக்கு அந்த நம்பர் விட்டு தரப்பட்டது.

அப்படி என்ன பேன்சி நம்பர் அது என பார்த்தால் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் 'ராஜாவின்டே மகன்' என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர், “என்னுடைய போன் நம்பர் 2255” என்று பேசும் வசனம் ரொம்பவே பிரசித்தம். அதனால் தான் தற்போது வாங்கியுள்ள புதிய காருக்கு அந்த போன் நம்பரே பதிவு எண்ணாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் KL 07 DJ 2255 என்கிற இந்த நம்பரை ஏலத்தில் பெற்றுள்ளார் மோகன்லால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !