உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைரசியில் இருந்து அமீர்கான் படத்தை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பைரசியில் இருந்து அமீர்கான் படத்தை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு


பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான அமீர்கான் நடிகராக மட்டுமல்லாமல், அமீர்கான் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது 'ஹேப்பி பட்டேல்' என்கிற படத்தை தயாரித்துள்ளார், வீர் தாஸ் என்பவர் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் நடித்துள்ளார். இந்த படம் இந்தியில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் வரும் ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படம் இணையதளங்கள் உள்ளிட்ட எதிலும் முறையற்ற வழியில் வெளியாகாமல் தடுப்பதற்காக கிட்டத்தட்ட 30 இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்த 30 இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு இந்த ஹேப்பி பட்டேல் படத்தை முறையற்ற வகையில் ஒளிபரப்பு மற்றும் விநியோகம் செய்யவோ கூடாது என இடைக்கால உத்தரவிட்டார்.

இது குறித்து நீதிபதி வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்பட விட்டால் தயாரிப்பாளருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்பதை குறிப்பிட்டதுடன், அதே சமயம் இந்த நிவாரணத்தின் பரந்த தன்மை காரணமாக முறையான வணிக நலன்களும் பாதிக்கப்படக்கூடும் என்பதையும் குறிப்பிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !