உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 ரிலீஸ் : ரசிகர்களுடன் படம் பார்க்க ஜப்பான் சென்ற அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 ரிலீஸ் : ரசிகர்களுடன் படம் பார்க்க ஜப்பான் சென்ற அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இதில் புஷ்பா திரைப்படம் ஜப்பானிலும் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையில் தற்போது ஜப்பானில் இந்த படம் வரும் ஜனவரி 16ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஜப்பானிய ரசிகர்களுடன் இந்த படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் டோக்கியோவிற்கு சென்றுள்ளார். இந்த தகவலையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன். கடந்த டிசம்பரில் இதேபோல தான் நடிகர் பிரபாஸ் தன்னுடைய 'பாகுபலி தி எபிக்' திரைப்படம் ஜப்பானில் வெளியானபோது அங்குள்ள திரையரங்கில் ஜப்பான் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !