விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது!
ADDED : 27 minutes ago
யூடியூப் தளத்தில் விஜே சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. இவர் சினிமாவில் இயக்கி, நடிக்கும் 'டயங்கரம்' படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை வெளிபுறத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை 1ம் தினத்தன்று 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் விஜே சித்து என்ஜினியரிங் EEE மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் படப்பிடிப்பு நிறைவு பெறாத இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளனர் என கூறப்படுகிறது.