உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர'

தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர'


நடிகர் தனுஷ் தற்போது 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்துள்ளார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தை பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் 54வது படத்திற்கு 'கர' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் இதன் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், இப்படம் எமோசனல், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது என இயக்குனர் பதிவிட்டுள்ளார். 2026 சம்மருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !