உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்'

அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்'


தமிழில் 'தகராறு, வீர சிவாஜி, தேன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கின்றார் என அறிவிப்பு வெளியானது.

இதில் அருள்நிதி உடன் இணைந்து ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா பாலா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இன்று இந்த படத்திற்கு 'அருள்வான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் தேன் படம் போன்று மலைவாழ் மக்கள் குறித்த படம் என முதல் பார்வை போஸ்டர் உணர்த்துகிறது. மேலும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !