ஜன., 30ல் திரைக்கு வரும் ‛கருப்பு பல்சர்'
ADDED : 13 hours ago
லப்பர் பந்து படத்திற்கு பிறகு கெத்து தினேஷ் ஆக மாறிய அட்டகத்தி தினேஷ் தற்போது அவரின் தந்தையின் இன்சியல் உடன் சேர்த்து வி.ஆர். தினேஷ் என தனது பெயரை மாற்றியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள 'கருப்பு பல்சர்' வருகின்ற ஜனவரி 30ந் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.
இயக்குனர் எம். ராஜேஷின் உதவி இயக்குனர் முரளி கிரிஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் தினேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரேஷ்மா வெங்கட், மன்சூர் அலிகான், கலையரசன் , சரவணன் சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். காளையை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அதன் உடன் ஒரு ஹாரர், த்ரில்லர் கதையும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.