உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் லோகேஷ், ரத்னகுமார் கூட்டணி

மீண்டும் லோகேஷ், ரத்னகுமார் கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‛கூலி' படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் சுமார் 600 கோடி வசூலை ஈட்டியது. இவரது அடுத்த படம் குறித்து பல தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என நேற்று அறிவிப்பு வந்தது. பொதுவாக லோகேஷின் அனேக படங்களில் இயக்குனர் ரத்னகுமார் ஒரு பங்காக இருப்பார். விக்ரம், மாஸ்டர், லியோ ஆகிய படங்களின் திரைக்கதை மற்றும் வசனங்களில் தனது பங்களிப்பை செய்து இருந்தார். கூலி படத்தில் அவர் பணியாற்றவில்லை. இப்போது அல்லு அர்ஜுன் இணையும் படத்தில் லோகேஷ் உடன் ரத்னகுமார் இணைவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !