மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, நலன் குமாரசாமி கூட்டணி
இயக்குனர் நலன் குமாரசாமி, நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தற்போது நலன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‛வா வாத்தியார்' படம் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நலன் குமாரசாமி , விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றனர். இந்த படத்திற்கு ‛கை நீளம்' என்ற தலைப்பு வைக்க உள்ளனர். ஏற்கனவே இந்த கதையை சூது கவ்வும் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில் கிளைமாக்ஸ் காட்சி அமையாததால் அந்த கதையை கைவிட்டனர். இப்போது கிளைமாக்ஸ் காட்சிக்கான ஐடியா கிடைத்துள்ளதாம். விரைவில் எங்கள் கூட்டணியில் கை நீளம் படம் உருவாகும் என நலன் குமாரசாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.