விஜய் பட தலைப்பில் கென் கருணாஸ்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ், ‛அசுரன், வாத்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முதல்முறையாக இயக்குனராக புதிய படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு ஜாலியான படம். கென் முக்கிய ரோலிலும் நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்ராமுடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்திற்கு 'யூத்' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் இப்படம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதே தலைப்பில் 2002ல் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய், சந்தியா கான் நடிப்பில் ஒரு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.