உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் கால்பதித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. தற்போது ரன்பீர் கபூருடன் ‛ராமாயணம்' படத்தில் நடிப்பவர், அமீர் கான் மகன் ஜூனைத் கான் உடன் இணைந்து 'ஏக் தீன்' எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லால் சிங் சத்தா படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த சுனில் பாண்டே இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அப்போது அந்த பட பணியில் ஏற்பட்ட தாமதத்தினால் வெளியாகவில்லை. இன்று இந்த படத்தை டீசருடன் இவ்வருட மே 1ந் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். காதல் கதையில் இப்படம் உருவாகி இருப்பது டீசரை பார்க்கையில் புரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !