உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது

மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது

நடிகை திரிஷா நாயகியாக நடித்து வெளியான முதல் படமான மெளனம் பேசியதே, காதலர் தினத்துக்கு ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது. அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த இந்த படம் 23 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆகின. காக்க காக்க படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் மெளனம் பேசியதே வர உள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல்களும், கதையும் இன்றும் பேசப்படுகிறது.

சமீபகாலமாக ரீ ரிலீஸ் டிரென்ட் அதிகரித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் மெளனம் பேசியதே சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன படங்களில் கேப்டன் பிரபாகரன், படையப்பா படங்களுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், ப்ரண்ட்ஸ், அட்டகாசம், ஆட்டோகிராப், குஷி, அஞ்சான், படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், இந்த ஆண்டு தேவர் மகன், மெளன ராகம், தெறி, மங்கத்தா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் மீண்டும் வர தயாராகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !