கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன்
இந்த பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் தாண்டி முன்னணி நடிகைகள் படங்களும் வெளியாகி உள்ளன. பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்தார். தெலுங்கில், கன்னடத்தில் பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இதுவே முதல் நேரடி தமிழ்ப் படம் இது. தெலுங்கில் கொடுத்த வெற்றியை தமிழிலும் பதிவு செய்ய வேண்டும் என்பது அவரின் நீண்டகால ஆசை. ஆனால், பராசக்தி படத்துக்கு கலலையான விமர்சனங்கள் வருகின்றன. இருப்பினும் ஸ்ரீலீலாவின் நடிப்பு பேசப்படும் விதமாகவே அமைந்துள்ளது.
வா வாத்தியார் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆகியிருக்கிறார் கிர்த்தி ஷெட்டி. அவர் நடித்த தி வாரியர், கஸ்டடி போன்ற படங்கள் தமிழ், தெலுங்கில் உருவாகி இருந்தாலும், வா வாத்தியார் தான் தனது முதல் நேரடி தமிழ்ப்படம் என்று பல பேட்டிகளில் அவர் கூறி வருகிறார். ஆனால், வா வாத்தியார் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் கேரக்டரும் பெரிதாக பாராட்டப்படவில்லை. அவர் சோகத்தில் இருக்கிறார்.
வா வாத்தியார் படத்தில் கொஞ்சம் வில்லத்தனமான கேரக்ரில் நடித்த ஷில்பா மஞ்சுநாத்துக்கும் தனது கேரக்டர் மக்களிடம் போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதாம்.
தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்த பிரார்த்தனாவுக்கு வேறு மாதியான கவலை. அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. ஆனால், கதைப்படி அவர் ஜீவா ஜோடியில்லை. மணப்பெண்ணாக வருகிறார். அதனால் அவரை ஹீரோயின் லிஸ்ட்டில் யாரும் சேர்க்கவில்லை. படம் ஹிட்டானாலும் பலன் கிடைக்கவில்லையே என அவர் பீல் பண்ணுகிறார்.
அதேப்போல் பொங்கலுக்கு வெளியான தெலுங்கு படமான தி ராஜா சாப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் நடித்தனர். அந்த படத்தின் தாக்கம் தமிழகத்தில் இல்லை. தெலுங்கிலும் இந்த படம் பெரிதாக வசூலை ஈட்டவில்லை. பல மாத உழைப்பு வீணாக போச்சே என்ற கவலையில் இருக்கிறார்கள்.