ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை
ADDED : 14 hours ago
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த படம் சிறை. இந்த படத்தில் எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், அனந்தா தம்பி ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த டிசம்பர் 25ம் தேதி இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக இயக்குனர்கள் ஷங்கர், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு இருந்தார்கள். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் 30 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிறை படம் வருகிற ஜனவரி 23ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.