உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது

பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது

பிரபாஸ் நடிப்பில் தி ராஜா சாப் என்ற படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் உடன் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போலீசாக பிரபாஸ் நடிக்கிறார். ஆக் ஷன் கதைக்களத்தில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த ஸ்பிரிட் படம் 2027ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி, தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட 8 மொழிகளில் திரைக்கு வர இருப்பதாக ஒரு போஸ்டர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !