துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்
ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் துரந்தர். ஸ்பை ஆக் ஷன் திரில்லர் கதையில் உருவான இந்தபடம் உலகளவில் 1,313 கோடி வசூலித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 2026 மார்ச் 19ல் துரந்தர் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள். இருப்பினும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் ஒத்திவைக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஆதித்ய தர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், துரந்தர் 2 திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு நடுவே துரந்தர்-2 படத்தின் டிரைலர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் இறுதிக்குள் திரையரங்குகளில் டிரைலரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .