அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள்
தனுஷ், மிருணாள் தாகூர் காதலிக்கிறார்கள், ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் என கடந்த ஆண்டு செய்தி பரவியது. ஆனால், அதை இரண்டு தரப்பும் மறைமுகமாக மறுத்தது. இரண்டுபேரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காத நிலையில், காதல் என்பது சாத்தியமில்லை. ஒரு இந்தி பட விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். மற்றபடி பெரியளவில் நட்பு கூட இல்லை என்று விளக்கம் சொல்லப்பட்டது.
இப்போது பிப்ரவரி 14ம் தேதி, அதாவது காதலர் தினத்தில் பிப்ரவரி 14ம் தேதி இருவருக்கும் திருமணம் என்ற வதந்தி கிளம்பியுள்ளது. வழக்கம்போல் இரண்டு தரப்பும் மறுக்கிறது. தனுஷ் வயது 42. மிருணாள் வயது 33. தனுஷ் மூத்த மகன் யாத்ரா 19வயதை தொட்டுவிட்டார். குடும்பம், சினிமா இமேஜ் காரணமாக மிருணாளை அவர் திருமணம் செய்யமாட்டார். கடந்த சில வாரங்களாக யாரோ இதை வேண்டுமென்றே பெரிதாக்குகிறரா்கள். மீடியாவில் செய்திகள் வர வைக்கிறார்கள். அது தனுசுக்கு வேண்டாதவர்களாக இருக்கலாம். அவர் மீது இப்படிப்பட்ட தாக்குதல் தொடர்கிறது.
சில மாதங்களாக பாடகி சுசித்ரா தனுஷ் மீது அவதுாறு பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் தனுசை தொடர்புப்படுத்தி அவர் மானேஜர் ஷ்ரேயாஸ் மீது நடிகை மான்யா குற்றம் சுமத்தினார். இப்போது மிருணாள் விவகாரம். இப்படி தனுஷ் கேரக்டரை குறி வைத்து தாக்குதல்கள் தொடர்கின்றன. இதை செய்வது அவரின் போட்டியாளர்களா? அவரால் பாதிக்கப்பட்டவர்களா? அல்லது திரையுலகில் வேறு யாருமா என்பது தெரியவில்லை' என்கிறார்கள் தனுசின் ஆதரவாளர்கள்.
நடிகை சோனியாஅகர்வாலை விவகாரத்து செய்தபின், கீதாஞ்சலியை திருமணம் செய்தார் தனுஷ் அண்ணன் செல்வராகவன். ஒருவேளை அண்ணன் மாதிரி தனுசும் மறுமணம் செய்வாரா என்று விசாரித்தால், இப்போதைக்கு தனுஷ் மனதில் அப்படியொரு திட்டம் இல்லை. ரஜினி மகளும் மறுமணம் குறித்து யோசிக்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.