உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 'பிரக்ருதி' என்ற யானையை, நடிகர் சிவகார்த்திகேயன், ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், தனி நபர்கள், நிறுவனங்கள், பொது நிறுவன அமைப்புகள் என, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்தி கேயன், 'பிரக்ருதி' என்ற பெண் யானையை, ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்கொடைகள் வருமானவரி சட்டப் பிரிவு 80G-ன் கீழ் (பொருந்துமாறு) வரிவிலக்கு பெற தகுதியுடையவை. விலங்குகளை தத்தெடுக்க கூடுதல் விபரங்களுக்கு http://aazp.in/adoption/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

கடந்தாண்டும் இதே வண்டலூர் பூங்காவில் ஒரு சிங்கம், ஒரு புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !