ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை
கே.ஜே.சுரேந்தர் இயக்கும் 'மாயபிம்பம்' படம் இந்த வாரம் ரிலீஸ். 'சேது' படத்துக்கு பின் அதிக முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது இந்த படத்துக்குதான் என்கிறார்கள் கோலிவுட்டில். படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ''நானே படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறேன். ரொம்ப வசதியான குடும்பம் கிடையாது. நகை, இடத்தை, பெற்றோர்களின் பணத்தை வைத்துதான் படத்தை உருவாக்கினேன். ஒருவழியாக இந்த வாரம் படம் ரிலீஸ் ஆகிறது.
படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் பற்றி எனக்கு தெரியவில்லை. அவர்கள் டச்சில் இல்லை. அவர்கள் செயல்பாடுகளை நானே சமூகவலைதளங்கள் மூலமாகதான் தெரிந்து கொள்கிறேன். ஹீரோயின் ஜானகி, கேரளாவை சேர்ந்தவர். மற்ற சில நடிகர்கள் இந்த படத்துக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.'' என்கிறார்.
படம் உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஹீரோ, ஹீரோயின் படத்தை மறந்துவிட்டதாக தகவல். கடலுாரை சேர்ந்த டாக்டருக்கு படிக்கும் ஒரு பையன், நர்சை காதலிக்கிறேன். ஆனால், அவன் கடைசியில் ஜெயிலுக்கு போகிறான். அந்த காதலுக்கு என்னாச்சு என்ற ரீதியில் கதை நகர்கிறதாம்.