உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ருதிஹாசன் 40வது பிறந்தநாள் : தம் அடிக்கிற போஸ்டர் வெளியீடு

ஸ்ருதிஹாசன் 40வது பிறந்தநாள் : தம் அடிக்கிற போஸ்டர் வெளியீடு

நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டன. அதில் ‛ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தின் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது, சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

அதில் சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக இருந்தார் ஸ்ருதிஹாசன். பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் சாத்விகா ஹீரோயின். ஸ்ருதிஹாசனுக்கு முக்கியமான வேடம். ஒருவேளை வில்லியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால், இப்படிப்பட்ட போஸ்டரை வெளியிட்டு இருப்பதாக தகவல்.

தெலுங்கில் உருவாகும் இந்த படம் மலையாளம், தமிழ், இந்தியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிறந்தநாளில் இப்படிப்பட்ட போஸ்டரை படக்குழு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு முன்னமே ஸ்ருதிஹாசன் ஓகே சொல்லிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்குமுன்பு சில பேட்டிகளில் தனக்கு சில கெட்ட பழக்கம் இருந்தது. பின்னர் அதிலிருந்து விலகிவிட்டேன் என்று ஸ்ருதிஹாசன் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !