உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 4 வருடங்களுக்கு பிறகு ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் ராய் லட்சுமியின் 'ஜனதா பார்'

4 வருடங்களுக்கு பிறகு ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் ராய் லட்சுமியின் 'ஜனதா பார்'


தமிழ், தெலுங்கில், கவர்ச்சி கதாநாயகி வேடங்களிலும் மலையாளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதையின் நாயகி வேடங்களிலும் நடித்து தென்னிந்திய அளவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை ராய் லட்சுமி. தெலுங்கிலும் முக்கிய படங்களில் நடித்த இவர் அதன் பிறகு அப்படியே ஹிந்திக்கு சென்று அங்கேயும் சில படங்களில் நடித்தார். 2024ல் மலையாளத்தில் வெளியான 'டிஎன்ஏ' என்கிற படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2022ல் ராய் லட்சுமி நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக 'ஜனதா பார்' என்கிற படம் வெளியானது.. (அப்படி ஒரு படம் வெளியானதாக விக்கிபீடியாவில் கூட தகவல் இல்லை) அந்தப் படம் வெளியான சமயத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் மவுத் டாக் மூலமாக அந்த படம் குறித்து தகவல் பரவியதால் தற்போது அந்த படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து அதே பெயரில் வெளியிடுகிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் பின்னணியில் பழிவாங்கும் கதையாக ரமணா மோகிலி என்பவர் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் ராய் லட்சுமி அடிதடி ஆக்சன் காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளார். ஹிந்தி ரிலீஸை தொடர்ந்து மலையாளத்திலும் ராய் லட்சுமிக்கு என ஒரு மார்க்கெட் இருப்பதால் அங்கேயும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !