எர்ணாகுளத்தப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறிய மம்முட்டி
ADDED : 43 minutes ago
நடிகர் மம்முட்டியை பொருத்தவரை அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் கூட எந்த இடத்திலும் தன்னை ஒரு மதத்தைச் சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல இந்து மத சடங்குகள், விசேஷ நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்பவர். அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள எர்ணாகுளத்தப்பன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் அங்கு நடைபெற்ற மகா அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறி அன்னதானத்தையும் துவக்கி வைத்தார் மம்முட்டி. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மத நல்லிணக்கத்தை பேணிக்காப்பதில் மம்முட்டிக்கு நிகர் இல்லை என்று தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.