காந்தாரா பாணியில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'கோரகஜ்ஜா'
ADDED : 40 minutes ago
இந்துக்களின் பாரம்பரிய கலைகளை, பண்பாட்டை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' படத்தின் இரண்டு பாகங்களும் மிக பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அதே பாணியில் 'கோரகஜ்ஜா' என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. கர்நாடகாவில் உள்ள காரவலி பகுதியைச் சேர்ந்த மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் தெய்வ வழிபாட்டு முறைக்கு தான் கோரகஜ்ஜா என்று பெயர்.
எண்ணூறு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் மொத்தம் 31 பாடல்கள் இடம் பெறுகின்றன. தென்னிந்திய மொழிகளில் துளுவையும் சேர்த்து மற்றும் ஹிந்தியில் என மொத்தம் ஆறு மொழிகளில் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுதீர் அட்டாவர் என்பவர் இயக்கியுள்ளார்.