உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா ஸ்டுடியோ முன் செல்பி எடுத்த தெலுங்கு இயக்குனர்

இளையராஜா ஸ்டுடியோ முன் செல்பி எடுத்த தெலுங்கு இயக்குனர்

இசையமைப்பாளர் இளையராஜா மொழி கடந்து எண்ணற்ற ரசிகர்களை வைத்திருப்பவர். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவரது இசைக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அவரது பழைய பாடல்கள் இப்போதைய படங்களில் இடம் பெறுவது ஒரு சென்டிமென்ட் ஆகிவிட்டது. தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் அவரது பாடல்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சென்டிமென்ட் தற்போது தெலுங்கிற்கும் போய்விட்டது. சமீபத்தில் வெளிவந்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த 'தளபதி' படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் இடம் பெற்று பெரிதும் ரசிக்கப்பட்டது.

இளையராஜாவிடம் முறையான அனுமதி கேட்டால் அவர் நிச்சயம் சம்மதிப்பார் என அப்படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி பேட்டி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனரான ஹரிஷ்சங்கர் நேற்று சென்னையில் இளையராஜா ஸ்டுடியோ முன்பு நின்று செல்பி ஒன்றை எடுத்துப் பதிவிட்டு, “கடவுளின் தரிசனத்தைப் பெற்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை இயக்கி வருகிறார். மார்ச் மாதம் 26ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்தை சந்திப்பதற்கு முன்பாக இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஒருவேளை இப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பயன்படுத்த அனுமதி கேட்பதற்காக சந்தித்திருப்பாரோ ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !