உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவர் அபிஷேக் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய்

கணவர் அபிஷேக் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய்

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். காதல் திருமணம் புரிந்த இவர்களுக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி பிரிவு என்ற கிசுகிசு வருவதும் பின்னர் அது அடங்கிப் போவதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட இவர்கள் குடும்பமாக வெளியில் சென்ற புகைப்படங்கள் வெளிவந்து அந்த கிசுகிசுக்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது.

அபிஷேக் பச்சனுக்கு நேற்று 50வது பிறந்தநாள். அதற்காக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவரது வாழ்த்தில், “அன்புள்ள பாபி-பாப்பாவுக்கு இனிய 50வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும், மனநிறைவும், நல்ல ஆரோக்கியமும் நிறையட்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், எப்போதும் பொலிவுடன் இருங்கள்... பிரகாசியுங்கள் அன்பே....,” என வாழ்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !