உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ல் வெளியான படம் ‛புலி'. இந்த காலக்கட்டத்தில் அதாவது 2015 - 16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரி தாக்கல் செய்தார் விஜய். ஆனால் புலி படத்திற்காக அவர் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்து இதை வெளியிட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.

வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை இன்று(பிப்., 6) வழங்குவதாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை. அவருக்கு அபாராதம் விதித்தது செல்லும் என கூறி அவரின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !