உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கி, 1949ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் 1980 - 90களில் முன்னணி இயக்குனராக இருந்தார். 70க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். ரஜினி நடித்த அதிக படங்களை இயக்கியவர் இவர்.

இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு கலைத்துறை வித்தகர் விருதை அறிவித்துள்ளது. இவர்களுக்கு ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !