உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ!

'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ!


'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவின்த் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்துள்ள 'வித் லவ்' படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்கியுள்ளார் .இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர்.பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனங்களின் மூலம் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து முதல் நாள் வசூலிலும் அது பிரதிபலித்துள்ளது. அதன்படி, 'வித் லவ்' திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 1.53 கோடியும், உலகளவில் ரூ. 2.50 கோடி வசூலையும் கடந்துள்ளதாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !