உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா!

மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா!


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த 'தக்லைப்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த திரிஷா, அதன்பிறகு தற்போது சூர்யாவுடன் 'கருப்பு' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வாம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' போன்ற படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.

அடுத்தபடியாக புதிய படங்களுக்காக காத்திருக்கிறார். மேலும், தனது உடல்கட்டை பிட்டாக வைத்திருப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் திரிஷா, ஏற்கனவே ஜிம்மில் ஒருக்கவுட் செய்தபோது எடுத்த ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்து, திரிஷா ஒரு நோயாளி போன்று உடல் மெலிந்து இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிலும் அவர் உடல் மெலிந்து தான் காணப்படுகிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் நடைபயணம் மட்டுமே போதும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வார இறுதியில், சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !