'கர' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த தனுஷ்
ADDED : 137 days ago
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' எனும் படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தனுஷ் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் தேதியை பொறுத்து தான் இறுதியாகும் என்கிறார்கள். ஏப்ரல் 10 அல்லது 30ல் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.