கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில்
ADDED : 53 days ago
இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் கங்கை அமரன். சமீபத்தில் நடிகராகவும் மாறி ‛லெனின் பாண்டியன்' என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த ‛மீன்முள்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் இதுவரை 1800க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளேன். இவற்றை தொகுத்து புத்தகமாக அண்ணன் இளையராஜா பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். ராமராஜன், கனகாவின் தோற்றம் மாறிவிட்டது. கவுண்டமணிக்கு உடல்நலம் சரியில்லை, செந்திலும் படங்களில் நடிப்பதில்லை. இவர்கள் இல்லாமல் படம் எடுத்தால் நன்றாக இருக்காது. அதனால் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்பில்லை'' என்றார்.