'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால்
மலையாளத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் படம் 'பேட்ரியாட்'. 17 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் மற்றும் கதாநாயகியாக நயன்தாரா என கலர்புல்லான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மலையாளத்தில் 'டேக் ஆப், மாலிக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 23ம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் மோகன்லால் இந்த படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை பேசி நிறைவு செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு 'ஓகே அல்ல மோனே' என்று உற்சாகமாக கேட்டுள்ளார்.