இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்'
ADDED : 23 hours ago
இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கும் கிராமத்து பின்னணியிலான படம் சைலப்பன் சைக்கிள் மார்ட். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சுப்ரமணிய சிவா, இசக்கி கார்வண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு தென் தமிழக கிராமம், அங்கு வாழும் மனிதர்கள், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு நகைச்சுவை கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறதாம்.
சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து கிராமத்தின் முகம், மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கும் சுகா பிரபல எழுத்தாளர், வசனகர்த்தா.மறைந்த நெல்லைகண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது