உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு

‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு

உப்பன்னா பட இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

மார்ச் மாதம் வெளியாக வேண்டிய படம் இப்போது ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்லைட் உரிமம் வியாபாரம் ஆகவில்லை. ஆனால், இதன் டிஜிட்டல் உரிமயை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 115 கோடிக்கு கைபற்றியுள்ளனர். ஆடியோ உரிமையை டி சீரியஸ் நிறுவனம் ரூ. 18 கோடிக்கு கைபற்றியுள்ளனர். இதன் சாட்டிலைட் மற்றும் ஹிந்தி சாட்டிலைட் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !