உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார்

கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார்

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நகரம் தான் சீதாதோடு பஞ்சாயத்து. இங்கே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சினிமா தியேட்டர் எதுவும் இல்லை. இங்கிருந்து படம் பார்க்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் பயணித்து ராணி, கொன்னி மற்றும் பத்தினம்திட்டா ஆகிய நகரங்களுக்கு தான் இந்த பகுதி மக்கள் சென்று வந்தனர். அந்த வகையில் சினிமா பார்ப்பது என்பதே இந்த பகுதி மக்களுக்கு ஒரு ஆடம்பர செலவாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சீதாதோடு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் எம்எல்ஏ கேயு ஜெனிஸ் குமார் உதவியுடன் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றையும் அதனுடன் இணைந்த 6 கோடி மதிப்பிலான திரையரங்கு ஒன்றையும் கட்டியுள்ளனர். கேரள அரசாங்கத்தால் கிராம பஞ்சாயத்து மூலம் முதன்முறையாக கட்டப்பட்ட திரையரங்கம் இதுதான்.

இந்த திரையரங்கில் கிட்டத்தட்ட 143 பேர் அவரது பார்க்கும் விதமாக சகல விதமான முன்னணி தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ம் தேதி இந்த திரையரங்கம் மற்றும் வணிக வளாகம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.பி ராஜேஷ் மற்றும் நடிகை பாவனா ஆகியோ கலந்து கொள்ள இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !