உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி

பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி

தமிழ் சினிமாவில் சிவாஜி சாதிக்காத விஷயங்களே இல்லை. சில வெளிப்படையாக தெரியும், சில சாதனைகள் மறைந்திருக்கும். அதற்கு ஒரு உதாரணம் 1958ம் ஆண்டு சிவாஜி 8 படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இனி அதற்கான சாத்தியமும் இல்லை.

1958ம் வருடத்தின் முதல் படம் 'உத்தமபுத்திரன்'. இது நூறு நாள் ஓடியது. சில தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. அடுத்து வெளியான 'பதிபக்தி' 100 நாட்கள் ஓடிய படம். மூன்றாவதாக வெளியான 'சம்பூர்ண ராமாயணம்' ஐந்து நகரங்களில் 100 நாட்களும் மதுரையில் 165 நாட்களும் ஓடியது.

நான்காவதாக வெளிவந்த படம் 'பொம்மை கல்யாணம்' 50 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு சில தியேட்டர்களில் 100 நாளை கடந்தது. ஐந்தாவது படம் 'அன்னையின் ஆணை'. இதுவும் 100 நாள் படம். ஆறாவதாக வெளியான 'சாரங்கதரா', ஏழாவதாக வெளியான 'சபாஷ் மீனா', எட்டாவதாக வெளியான 'காத்தவராயன்' ஆகிய படங்களும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Dharmakulasingham, Jaffna
2026-02-27 12:29:15

உண்மைகள் சில சமயங்களில் உறங்கிவிடும். இன்று பெரும் நடிகர்கள் வருடத்திட்க்கு எத்தனை படங்கள் நடிக்கிறார்கள்.நடிகர் திலகத்தின் படங்கள் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகின.சூப்பர் ஹிட் படங்கள். உண்மையில், நடிகர்திலகம் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆனதுமட்டுமல்ல , வசூல் சக்கரவர்த்தி.