உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்ன படங்கள் ஹிட், புதுமுகங்களுக்கு வரவேற்பு : தமிழ் சினிமாவில் புது டிரெண்டா?

சின்ன படங்கள் ஹிட், புதுமுகங்களுக்கு வரவேற்பு : தமிழ் சினிமாவில் புது டிரெண்டா?

முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் இப்போது ஹிட்டாவதில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் போட்ட முதலீட்டை திரும்ப பெறுவதில்லை என்ற நிலை சமீபகால தமிழ் சினிமாவில் நிலவுகிறது. அதேசமயம், சில ஆண்டுகளாக சின்ன படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடித்த, இயக்கிய படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

இந்த வாரம் வெளியான யூத் படம் அதற்கு நல்ல உதாரணம். படத்தை இயக்கி, நடித்த கென்னுக்கு இது முதல் படம். ஹீரோயினாக நடித்தவர்கள் பெரிய ஸ்டார்கள் அல்ல, சில படங்களில் நடித்தவர்கள். படத்தின் பட்ஜெட் குறைவு. இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைக்காவிட்டாலும் பிக்அப் ஆகியுள்ளது. மொத்தமாக 40 முதல் 50 கோடிவரை படம் வசூலிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இது யூத் படத்துக்கு பெரிய வெற்றி.

அதேபோல், சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய்கிழவி படம் பெரிய வெற்றி பெற்றது. அது அவருக்கு முதல் படம். மதன் இயக்கிய வித் லவ் படமும், நிதேஷ் சஹாதேவ் இயக்கிய தலைவர் தம்பி தலைமையில் படமும் இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்கள். இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் அறிமுக இயக்குனர்கள். இப்படிப்பட்ட புது டிரென்ட் தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கிறது.

இது நல்ல விஷயம். பல திறமைசாலிகள் வெளியே வருவார்கள். வித்தியாசமான படங்களையும் பார்க்கலாம். கடந்த ஆண்டு கூட ‛சிறை, டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன், ஆண்பாவம் பொல்லாதது , டியூட், மிடில் கிளாஸ் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்கள் முதல் பட இயக்குனர்களே' என்ற புள்ளி விவரங்களும் கோலிவுட்டில் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !